மே தின பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது

81பார்த்தது
மே தின பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூரில் மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் (ம) அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆகியவற்றின் சார்பில் உலக தொழிலாளர்கள் தின பேரணி (ம) கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவபெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன். குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கட்டுமான தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நலவாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் மே தினம் உருவானது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் பேசியவர் தொழிலாளர்கள் சங்கங்களில் இணைத்து ஒற்றுமையாக இருந்தால் அனைத்து சலுகைகளையும் நலத்திட்டங்களையும் பெற முடியும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய பொன். குமார் தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி முடிவடைவதற்குள் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக கிடைத்துவரும் ரூ. 1200 ரூபாயை உயர்த்தி, ரூ. 2000 ஆக பெற்றுத் தரப்படும் என்று உறுதி அளித்தார். கூட்டத்திற்கு முன்னதாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மதரசா சாலை வழியாக ஆத்தூர் சாலையில் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபம் வரையில் தொழிலாளர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் MLA பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி