மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்

71பார்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வை, குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர்நலப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நமது பெரம்பலூர் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச்சேர்ந்த 2, 294 மாணவர்களுக்கும், 2, 602 மாணவிகளுக்கும் என மொத்தம் 4, 896 மாணவ மாணவிகளுக்கு ரூ. 2, 36, 26, 120 மதிப்பிலான மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் தொடக்கமாக இன்று குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 146 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி