தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை.

83பார்த்தது
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை.
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா வயது 49, தொழிலாளியான. இவருக்கு உஷா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜா தனது குடும்பத் தினருடன் நள்ளிரவு வரை பேசி விட்டு தூங்க சென்றார். அதிகாலை உஷா எழுந்து பார்த்த போது வீட்டின் கதவு வெளிப்பக் கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அருகே இருந்தவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்து வீட்டின் கதவை திறக்க செய்தார். பின்னர் உஷா வீட்டின் தாழ்வாரத்திற்கு சென்று பார்த்த போதுராஜா சேலையில் தூக்கில் பிணமாக தொங்கிகொண் டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து. சென்று ராஜா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் "அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்ப 'வம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி