கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

62பார்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம காவல் திட்டத்தின் மூலம் காவலர்கள் பொதுமக்களிடம் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் கிராம காவல் திட்டத்தின் மூலம் கிராம காவலர்கள் அனைவரும் தங்களது கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதன்படி குழந்தைகளிடம் தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டம் சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளின் சிறு சிறு தவறுகளுக்காக கண்டிப்பதாக நினைத்து குழந்தைகளை திட்டுவதை நிறுத்தி அன்பான முறையில் அறிவுறை கூற வேண்டும். குழந்தைகளை நம்பிக்கையான உறவினர்களை தவிர வேறுயாரிடமும் ஒப்படைத்து விட்டு வேலைக்கு செல்லக்கூடாது.
மழைக்காலம் என்பதால் பள்ளி சிறுவர்களை ஆறு, குளம், கிணறு, குட்டை ஆகிய இடங்களில் தனியாக குளிப்பதற்கு அனுமதிக்க கூடாது.
18 -வயது குறைவானவர்களை இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது. (இது மோட்டார் வாகன சட்டப்படி அந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் பெற்றோர்களும் குற்றவாளி ஆகிறார்கள். குழந்தைகளை கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேற்கண்ட தலைப்புகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி