10 வகுப்பு பொது தமிழ் தேர்வு 140 பேர் தேர்வு எழுத வரவில்லை

58பார்த்தது
10 வகுப்பு பொது தமிழ் தேர்வு 140 பேர் தேர்வு எழுத வரவில்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த 10ம் வகுப்பு பொது தமிழ் தேர்வு, 140 பேர் தேர்வு எழுத வரவில்லை,.


பெரம்பலூர் மாவட்டத்தில் 10 வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது
இதில் 144 பள்ளிகளைச் சேர்ந்த 4, 376 மாணவர்கள், 3, 627 மாணவிகள் என மொத்தம் 8, 003மாணவ மாணவிகள்
தேர்வு எழுத விண்ணப்பித்திறந்த நிலையில்,
இதில் 43 தேர்வு மையங்களில் மார்ச் 26ம் தேதி முதல் நாள் தமிழ் தேர்வில், 4, 283 மாணவர்கள், 3, 576 மாணவிகள் என மொத்தம் 7859 மாணவ மாணவிகள் தேர்வை எழுதினார்கள். இதில் 93 மாணவர்கள் மற்றும் 51 மாணவிகள் என மொத்தம் 144 பேரில், நான்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு விளக்கு அளிக்கப்பட்ட நிலையில் 140 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மேலும் தேர்விற்கு வராத மாணவ மாணவிகள் ஒவ்வொருவரின் தகவல்கள், அவர்கள் ஏன் தேர்வெழுத வரவில்லை என்பதற்கான காரணம் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்விலும் தேர்வெழுத வராத மாணவ மாணவிகள் குறித்த தகவல்களும் விபரங்களும் சேகரிக்கப்பட வேண்டும், மார்ச் 26 ஆம் தேதி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி