தீவு நாடான பிஜியில் நிலநடுக்கம்

66பார்த்தது
தீவு நாடான பிஜியில் நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் புதன்கிழமை காலை 6.58 மணிக்கு (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் சுவா என்ற இடத்தில் பூமி அதிர்ந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பான முழு விவரங்கள் இன்னும் வரவில்லை.

தொடர்புடைய செய்தி