தனிமையின்றி சமூகத்துடன் இணைந்து வாழ்வது மனநல ஆரோக்கியத்துடன், இதய நோய், சர்க்கரை நோய் (டைப்-2) பக்கவாதம் உள்ளிட்டவற்றை தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் - சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது. சுமார் 42,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் இதனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.