பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த மாபெரும் விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாட்டாளர்கள் uநடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், விளையாட்டுகளின் போது 140-க்கும் மேற்பட்ட இணைய தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்கள் முக்கியமாக அரசாங்க நிறுவனங்கள், விளையாட்டு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை குறிவைத்ததாக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.