உயிரிழந்த மாணவருக்கு இழப்பீடு வழங்க பழனிசாமி கோரிக்கை!

51பார்த்தது
உயிரிழந்த மாணவருக்கு இழப்பீடு வழங்க பழனிசாமி கோரிக்கை!
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், கடலூர் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த கிஷோர் என்ற மாணவன் பள்ளியில் சக மாணவர் ஒருவர் எறிந்த ஈட்டி தலையில் குத்தி பெரிய அளவில் காயத்தை ஏற்படுத்தி மரணித்ததாக தெரிகிறது. இந்த விபத்திற்கு காரணம் இடவசதியில்லா பயிற்சி மைதானம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாததே என்று மாணவனின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாணவருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி