அதிமுகவின் தேர்தல் முழக்கத்தை அறிவித்த பழனிசாமி

62பார்த்தது
அதிமுகவின் தேர்தல் முழக்கத்தை அறிவித்த பழனிசாமி
திமுக எம்.பிக்கள் தமிழ்நாடு மக்களின் பிரச்னைக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம் என்பது அதிமுகவின் தேர்தல் முழக்கம் என கூறினார். காவிரி நதி நீர் பிரச்னை வந்த போது தமிழ்நாடு மக்களுக்காக அதிமுக அரசு நல்ல தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது. அதிமுக எம்.பிக்கள் இரு அவைகளிலும் அழுத்தம் கொடுத்து ஒத்தி வைக்கும் அளவுக்கு போராடியவர்கள். அந்த அழுத்தம் காரணமாகவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது என்றார். திமுக ஆட்சியில் இல்லாதபோது Go Back Modi என்பார்கள்; கேலோ விளையாட்டு போட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது Welcome Modi என்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி