டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பானங்களுக்கு அச்சிடப்பட்ட பில் வழங்கும் நடைமுறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அரக்கோணம் மற்றும் ராமநாதபுரத்தில் இந்த நடைமுறை இருக்கும் நிலையில், தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக தெரிகிறது. மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் உள்ள நிலையில், பில் நடைமுறை வந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.