ஜூன் 4ஆம் தேதி மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு!

15001பார்த்தது
ஜூன் 4ஆம் தேதி மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு!
மக்களவை தேர்தலையொட்டி, வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள், பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும்; அனைத்து FL2, FL3, FL4A உரிம தலங்கள் ஆகியவை 04.06.2024 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அந்த தினத்தில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக் கூடாது.

மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி