சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சரண்குமார் (34) ஐ.டி. ஊழியராக இருந்தார். திருமணமாகாத இவர் நேற்று (நவ. 12) அதிகாலை 2:30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், சரண்குமார் ஆன்லைன் ரம்மி, பிட்காயின் உள்ளிட்ட பலவற்றிலும் பணம் கட்டி பங்கேற்றுள்ளார். இதற்காக, 60 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி விளையாடியதும், அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது.