ஆன்லைன் முதலீடு.. பல்மருத்துவரிடம் ரூ.1,19,67,381 மோசடி

81பார்த்தது
ஆன்லைன் முதலீடு.. பல்மருத்துவரிடம் ரூ.1,19,67,381 மோசடி
சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தைப் பார்த்து, அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்புக் கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் கூறியபடி முதலீட்டு செயலியை டவுன்லோடு செய்து அதில் ஒரு கோடியே 19 லட்சத்து 67ஆயிரத்து 381 ரூபாயை முதலீடு செய்துள்ளார். பின்னர், அதிக லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அந்த செயலி போலியானது என தெரியவந்தது. உடனே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மோசடி செய்த சதீஷ்குமார் (35), சதீஷ் (26) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி