புதுக்கோட்டை பகுதியில் நேற்று நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். புதுக்கோட்டையில் இருந்து திருவரங்குளத்துக்கு பைக்கில் மாணிக்கவாசகம் (36) என்பவர் புறப்பட்டார். அப்போது அவர் மீது தனியார் பஸ் மோதியதால் நிற்காமல் சென்று விட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணிக்கவாசகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. பேருந்து ஓட்டுநரின் நடத்தை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.