மதுரையில் வெயில் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு

57பார்த்தது
மதுரையில் வெயில் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு
கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்வரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை - திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை பகுதியில் தனது லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க சென்றுள்ளார். அப்போது வெயிலின் தாக்கத்தால் வலிப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டது. காலையில் உயிரிழந்த அவரது உடலை மாலை வேளையில் மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி