'பெண்களுக்கான வயாகரா' என்று அழைக்கப்படும் ஜாதிக்காய்

69பார்த்தது
'பெண்களுக்கான வயாகரா' என்று அழைக்கப்படும் ஜாதிக்காய்
ஜாதிக்காய் மசாலா பொருளானது குறிப்பாக பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பெயர் போனது. இதனை சரியான அளவில் தினமும் தங்களது டயட்டில் சேர்த்து வரும் பெண்கள் பல்வேறு விதங்களில் பலனடையலாம். ‘பெண்களின் வயாகரா’ என்று அழைக்கப்படும் இந்த ஜாதிக்காய் அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் காப்பர் போன்ற மினரல்கள் வைட்டமின் B1, B6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் ஜாதிக்காயில் நிறைந்துள்ளது. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இனப்பெருக்க உறுப்புகளுக்கு வலு சேர்ப்பதற்கு ஜாதிக்காய் ஆயுர்வேதத்தில் முக்கியமான இடத்தை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இது பெண்களின் வயாகரா என்று அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி