வாயு வெளியேறும் போது கெட்ட வாடை வீசுவது ஏன்?

63பார்த்தது
வாயு வெளியேறும் போது கெட்ட வாடை வீசுவது ஏன்?
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினை ‘வாயுத் தொல்லை’(Flatulence) எனப்படுகிறது. குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போது தான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி