பெண் பயணியிடம் அத்துமீறல்.. வாடகை கார் டிரைவர் கைது

51பார்த்தது
பெண் பயணியிடம் அத்துமீறல்.. வாடகை கார் டிரைவர் கைது
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கரியாஹட் பகுதிக்குச் செல்வதற்காக ஆன்லைன் செயலி மூலம் வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். பின்னர் கார் வந்த பிறகு அதில் எரிய பெண்ணிற்கும் டிரைவருக்கும் ஏசி இயக்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார் டிரைவர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டியதாகவும், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டிரைவர், அந்த பெண் பயணம் செய்ததிற்கு பணம் கொடுக்காமல் இறங்கி சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி