போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

112589பார்த்தது
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக இரண்டாவது கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். 19ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.