லண்டனை தலைமையிடமாக கொண்ட Nothing ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான Nothing Phone 1-ஐ கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதனையடுத்து Nothing 2, Nothing 2a, Nothing 2a special edition என வரிசையாக அதன் தயாரிப்புகளை வெளியிட்டது. இந்நிலையில், 3 கேமராக்களுடன் கூடிய Nothing 3a என்ற புதிய தயாரிப்பின் ஃபர்ஸ்ட் லுக்கை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இந்த Nothing 3a அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை ரூ.25 ஆயிரமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.