பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 15ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 12வது இடத்தில் தொடர்கிறார். மற்ற இந்திய வீரர்கள் பிரனாய் (26), பிரியான்ஷு (34), கிரண் ஜார்ஜ் (38) பின் தங்கியுள்ளனர்.