மன்சூர் அலிகானின் தலைவர் பதவி பறிப்பு

96794பார்த்தது
மன்சூர் அலிகானின் தலைவர் பதவி பறிப்பு
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச் செயலாளரான கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி