பேன்ட் பாக்கெட்டில் வெடித்த மொபைல் (வீடியோ)

71415பார்த்தது
குஜராத்தில் உள்ள ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. நகரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அந்த இளைஞன் பாக்கெட்டில் இருந்து புகை வருவதை கவனித்தார். அவர் உடனடியாக உஷாராகி பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து கீழே போட்டார். அதே நேரத்தில் போன் வெடித்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி