கடன் வாங்குவதில் தமிழக அரசு முதலிடம்.. இபிஎஸ்

52பார்த்தது
கடன் வாங்குவதில் தமிழக அரசு முதலிடம்.. இபிஎஸ்
தமிழ்நாடு 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில், வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. திமுக ஆட்சியே கடனில்தான் நடக்கிறது. 8 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனை தமிழ்நாடு அரசு வைத்துள்ளது என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி