நீலகிரியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வெகுவாக வாழ்க்கை பாதிப்பு.
சென்னை வானிலை ஆய்வு மையம் கோவை மற்றும் நீலகிரிக்கு கனமழை இருக்கும் என அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டம் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றன மேலும் கனமழையால் சுற்றுலாப் பயணிகள் வெளியே வர முடியாமல் தங்கும் விடுதியில் முடங்கி உள்ளனர் மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமுடன் இயக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளனர்