போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் யானை விரட்டும் தீவிரம்...

68பார்த்தது
நாளை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ள யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் யானை விரட்டும் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான மு. அருணா பேட்டி.


நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தனியார் பள்ளியில் இருந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான மு. அருணா மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு. அருணா பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி