தேயிலை விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

80பார்த்தது
கோத்தகிரி அருகே கப்பட்டி பகுதியில் உணவு தேடி யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சமவெளிப் பகுதிகளில் தற்போது வறட்சி காலம் துவங்கி உள்ளதால் வனப் பகுதிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் உணவு தேடி வன விலங்குகள் மலை பகுதிக்கு வரத்துவங்கி உள்ளன.
கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமப்பகுதியில் சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு தேடி இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதிக்கு வேலைக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் வரைக்கும் இரவு நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி