நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைகளின் சார்பில் அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவில் ஆன வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு 25. 45 லட்ச மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டரையும் வழங்கினார் மேலும் 20 பழங்குடியினர் மக்களுக்கு பி எம் ஜென்மம் திட்டத்தின் கீழ் 1. 14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆவணங்களை வழங்கினார் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர் ராசா இதில் திட்ட இயக்குனர் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் வினித் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பாவியர் தண்ணீரு மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
நீலகிரி மாவட்டத்தில் குறைகள் ஒன்றும் இல்லாத அளவுக்கு 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள பணிகள் எதிர்வரும் மழைக்கு முன்னால் முடிக்கப்படும் எனவும் குடிநீர் திட்டம் விரைவில் முடிக்கப்படும் எனவும்
அவர் தெரிவித்தார்.
மேலும் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்களை ஆய்வு செய்ததில் குறை ஏதும் இல்லை எனவும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.