இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டது

591பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதியில் துணி தைக்கும் கடை நடத்தி வருபவர் லியோன் வெஸ்லி சாமுவேல் 44 இவர் மேல் குன்னூர் பகுதியில் உள்ள ரிவர் சைடு காட்டேஜ் பகுதியில் வசித்து வருகிறார் இவரது வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியூர் சென்று விட்டு வந்து நகைகளை கழட்டி வைத்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 25. 7. 2024, அன்று நகையை அடமானம் வைக்க பீரோவில் தேடிய போது நகை காணாமல் போய் இருப்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து வெஸ்லி லியோ சாமுவேல் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் இதனைத் தொடர்ந்து குன்னூர் டிஎஸ்பி குமார் உத்தரவின் பெயரில் மேல் குன்னூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சர்புதீன் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி