ரத்தக் கரையுடன் அம்மன் அழைப்பு. ஊட்டியில் வினோத வழிபாட்டு முறை.
ஊட்டி மாரியம்மன் காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரின் சிறப்பு ஊர்வலம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் தேவாங்கர் சமூகத்தினர் ஒன்றிணைந்து அவர்களுடைய வழக்கப்படி சக்தி என்னும் அம்மனை அழைத்து திருவீதி உலா நடத்துகின்றனர்.
தேவாங்கர் சமூக மண்டபத்தில் துவக்கப்பட்டு தலையில் அபிஷேக குடத்தை ஏந்தி ஒருவருக்கு அம்மன் அருள்பாளிக்கிறார். அவருக்கு முன்னதாக ஏராளமானோர் கைகளில் கத்தியை ஏந்தி அவர்களது உடலில் காயங்கள் ஏற்படுத்தி உடலை வருத்தி அம்மனை அழைக்கின்றனர்.
கத்திப்போட்டு கூப்பிட்டால் மட்டுமே சக்தி மனமிரங்கி வருகிறான் என்பது அவர்களது ஐதீகமாக உள்ளது. இதனால் இன்றைய தினம் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கத்தியால் அவர்களது உடலில் காயங்களை ஏற்படுத்தி வருத்திக்கொண்டு அம்மனை அழைக்கின்றனர்.