ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி - எல், முருகன் பெருமிதம்

57பார்த்தது
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது கடந்த இரண்டாம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று(செப்.10) நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு வந்த மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் காட்டேரி பகுதியில் உறுப்பினர் சேர்க்கையை துவக்கினார் அதில் புதிதாக சேரும் உறுப்பினர்களுடைய கைபேசியை வாங்கி அதில் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்தார். பின்பு குன்னூர் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் உலக நாடுகளிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி என்றும் தற்போது 10 கோடி உறுப்பினர்கள் கட்சியில் உள்ளதாகவும் தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இருப்பதாகவும் அப்போது 11 கோடி உறுப்பினர்கள் ஆகிவிடுவார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியை தான்டி தான் சைனாவில் உள்ள அனைத்து கட்சிகளும் மற்ற கட்சிகளும் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி