கோத்தகிரி குரூவ்வேலி அணி வெற்றி

79பார்த்தது
கோத்தகிரி குரூவ்வேலி அணி வெற்றி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடப்பாண்டில் புதிய உறுப்பினராக பதிவு செய்து விளையாட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்த அணிகளுக்கு இடையேயான தகுதிச் சுற்று லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தகுதிச் சுற்று போட்டியில் கோத்தகிரியைச் சேர்ந்த குரூவ் வேலி கிரிக்கெட் அணி மற்றும் ஸ்பார்டன் லெவன் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. தலா 35 ஓவர்கள் கொண்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்பார்டன் லெவன் அணி 17. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத்தொடர்ந்து 210 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குரூவ்வேலி அணி வெறும் 21 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி