காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை உயர்வு

63பார்த்தது
காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை உயர்வு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான மாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை மற்றும் இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வன விலங்குகளின் தொல்லை உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வரு கின்றனர். கேரட்டிற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலைக்கிடைத்து வருவதால் பெரும்பாலான விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் தங்களது தோட் டங்களில் கேரட்டைப் பயிரிட்டனர். கேரட் பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளனர் தற்போது மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி