வனத்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் வனவிலங்கு வேட்டையை தடுக்க தமிழ்நாட்டில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டை தடுப்பு இரவு சிறப்பு ரோந்து பணியில் வனத்துறையினர்.
தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா வனவிலங்கு சரணாலயம் என மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ள நிலையில் தமிழ்நாடு எல்லையில் வனவிலங்குகள் வேட்டை அதிகரித்து இருப்பதால் இதனை முழுமையாக தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் சசிகுமார் வனசகர் மேற்பார்வையில் மூன்று மாநில எல்லையான பைக்காரா சந்திப்பில் வன ஊழியர்கள் முதல் முறையாக வன குற்றங்களைத் தடுக்க சிறப்பு ரோந்து பணியை மேற்கொண்டனர், மேலும் தனித்தனியாக 10 குழுக்கள் வாகன தணிக்கைகளையும் ஈடுபட்டனர்