கிலோ 100-ஐ தாண்டிய கேரட் விலை விவசாயிகள் மகிழ்ச்சி

75பார்த்தது
தொடர் மழை காரணமாக நீலகிரியில் தேயிலை உட்பட மலை காய்கறிகளும் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேல் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டாலும் தேயிலை தவிர்த்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கேரட் , பீன்ஸ், பீட்ரூட் , முள்ளங்கி, வெள்ளை பூண்டு உள்பட சீன காய்கறிகளும் அதிகமாக பயிரிடுகின்றனர்.

கோத்தகிரி பகுதியில் விவசாயிகள் அதிகளவு மலை காய்கறி உற்பத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு விளைவிக்கப்படுகின்ற காய்கறிகள் மேட்டுப்பாளையம் மண்டிக்கு எடுத்துச் சென்று ஏல முறையில் விற்பனை செய்கின்றனர் இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, பெங்களூர், பாண்டிச்சேரி, மற்றும் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த வாரம் உருளைக்கிழங்கு பீட்ரூட் விலை உச்சத்தை தொட்ட நிலையில் ரூ. 50 , ரூ. 60 க்கு விற்பனையான கேரட் இந்தவாரம் ரூ. 100 முதல் 120 வரை விற்பனை ஆகிறது இதனால் கூக்கல் துறை, பேரகனி, தொட்டனி கோத்தகிரி, பகுதிகளில் விளைந்துள்ள கேரட் பயிரை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். கேரட் கழுவும் எந்திரங்கள் மூலம் கழுவப்பட்டு மேட்டுப்பாளையம் மண்டிக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர் கேரட்டின் விலை உச்சத்தை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி