குடியிருப்பு பகுதியில் பீதியை ஏற்படுத்திவரும்  கரடி

84பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக தண்ணீர் , உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கிறது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகளைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது தொடர்கதை உள்ளது. இந்த நிலையில் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு புதுமந்து பகுதியில் கரடி ஒன்று தொடர்சியாக உலாவருகிறது 

வீட்டு கதவை மனிதர்கள் போல் நின்று கொண்டு தள்ளி உடைக்கும் காட்சிகளும் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் நுழைந்து பொருட்களை சேதம் செய்யும் காட்சிகளும் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது

இதன் வீடியோ காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
தொடர்ச்சியாக  கரடி அந்த பகுதியில் உலா வருவதால் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது

உடனடியாக குடியிருப்புக்கள் பகுதி நுழைந்து பொதுமக்களை பீதியில் ஆழ்த்தும் கரடியை கூண்டு பிடித்து வனப்பகுதிக்குள் விட  கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி