மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை சுவர்களில் முருகப்பெருமான் ஓவியங்கள், பக்தி வாசகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. இங்கு பெளர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி மக்கள் தினமும் ‘வாக்கிங்’ செல்கின்றனர். இந்நிலையில் கந்தசேனா அமைப்பினர் கிரிவலப்பாதையின் இருபுறமும் உள்ள சுவர்களில் கட்டட உரிமையாளர்களின் சம்மதம் பெற்று திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், அரோகரா கோஷங்கள், ஓம் மந்திரம், வேல், மயில், ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.