அரசு பேருந்தை வழி மறைத்த காட்டுமாடு

81பார்த்தது
அரசு பேருந்தை வழி மறைத்த காட்டுமாடு பேருந்தில் பயணித்தவர்கள் அச்சம்.

சமூக வலைத்தளங்களில் வைரல்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் உதகை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சமீப காலமாக உலா வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை சாலையில் வழி மறைத்து நின்ற காட்டு மாடுகளால் பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அச்சமடைந்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்பு காட்டு மாடுகள் வனப்பகுதிக்குள் சென்றனர்.

எனவே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுற்றி தெரியும் காற்று மாடுகளை அடர்ந்த வனப் பகுதிக்குள்விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி