தூத்துக்குடி ஆட்சியராக இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், பொது நூலகங்களின் இயக்குநராக இருந்த இளம்பகவத் ஐஏஎஸ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை செய்தவர் இளம்பகவத். இவர், வேலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக முதன் முதலில் பணியை தொடங்கினார்.