புத்தாண்டு தினத்தில் (திங்கட்கிழமை) ஜப்பானில் சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, நோட்டோ தீபகற்பத்தில் புதிய கடற்கரைகள் உருவாக்கப்பட்டன. கடற்கரையில் சில இடங்களில், நிலம் 820 அடி வரை நீட்டிக்கப்பட்டு, புதிய கடற்கரைகளை உருவாக்கியது. மேலும் சில இடங்களில் 250 மீட்டருக்கும் அதிகமாக தரைத்தளம் வந்துள்ளதாக டோக்கியோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.