நீட் முறைகேடு - தேர்வு மைய அதிகாரி கைது

50பார்த்தது
நீட் முறைகேடு - தேர்வு மைய அதிகாரி கைது
நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் கோத்ராவில் ரூ.7 கோடி பெற்று நீட் தேர்வில் மாணவர்கள் மோசடி செய்ய உதவிய தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர் துஷார் பட் உள்ளிட்ட 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இதேபோல், குஜராத் பன்ச் மகால் மாவட்டத்தில் ரூ.10 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட துணை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார். இந்த நீட் தேர்வு முறைகேடு காரணமாக இதுவரை நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி