நீட் தேர்வை முறையாக நடத்துவது தேர்வு குழுவின் கடமை - ஜி.கே.வாசன்

56பார்த்தது
நீட் தேர்வை முறையாக நடத்துவது தேர்வு குழுவின் கடமை - ஜி.கே.வாசன்
கல்வி, படிப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுவது தான் மாணவர்களின் நலனுக்கு நல்லது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஆறுமுகநேரி நீட் தேர்வு மையத்தில் நடந்த குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய வாசன், நீட் தேர்வை முறையாக நடத்துவது தேர்வு நடத்தும் குழுவின் கடமை. தேர்வை சரியாக நடத்த தவறிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். தேர்வுகளில் தவறுகள் நடந்தால் சரி செய்யப்பட வேண்டும் அதற்காக சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்பது சரி அல்ல என்றார்.