நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர், "கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கருணை மதிப்பெண்கள் மூலம் மோசடிகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் 15 மாநிலங்களில் தேர்வு மோசடிகள் நடந்துள்ளன. எனவே நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.