தங்கப் பதக்கத்தை தவற விட்ட நீரஜ் சோப்ரா

62பார்த்தது
தங்கப் பதக்கத்தை தவற விட்ட நீரஜ் சோப்ரா
தோஹா டயமண்ட் லீக்கில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். நீரஜ் தனது ஆறாவது முயற்சியில் 88.36 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். செக் குடியரசை சேர்ந்த ஜக்குப் வாட்லெஜ் 88.38 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடத்தில் இருந்தார். அவரை முந்த முயற்சி செய்த நீரஜ் சோப்ரா தனது கடைசி எறிதலின் போது 88.36 மீட்டர் தூரத்திற்கு வீசினார். அதுவே இந்தப் போட்டியில் அவரின் சிறந்த பதிவாக இருந்தது. இதன் மூலம் இரண்டு சென்டிமீட்டர் அளவில் முதலிடத்தை நீர சோப்ரா தவற விட்டார்.

தொடர்புடைய செய்தி