விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் உற்பத்தி பயிற்சி

56பார்த்தது
விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் உற்பத்தி பயிற்சி
மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட, மரப்பரை கிராமத்தில், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நடந்த சிறுதானிய பயிர் உற்பத்தி குறித்து நடந்த விவசாயிகள் பயிற்சிக்கு, வட்டார துணைவேளாண்மை அலுவலர் பழனிவேல் தலைமை வகித்தார்.

இதில் ஓய்வுபெற்ற தோட்டக்கலை துணை அலுவலர் முருகவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறுதானியங்களின் வகைகள், சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள், சிறுதானியங்கள் சாகுபடி செய்தல், பூச்சி நோய் தாக்குதல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள், மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளுதல், மண்புழு உரம் தயாரித்தல் அதன் பயன்கள், போன்ற தொழில்நுட்பங்களை தெளிவாக விளக்கமளித்தார். கால்நடை உதவி மருத்துவர் ஹாரனி அவர்கள் கோமாரி நோய் தடுப்பூசி போடுதல், கால்நடைத்துறையின் திட்டங்கள் பற்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி