பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள ஶ்ரீ குரு ஈஸ்வரர் கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இதில் நந்திக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம் போன்ற வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.