நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், உரம்பு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் நேற்று மூலப்பள்ளிபட்டி, ஆயில்பட்டி, நாரைக்கிணறு மற்றும் மங்களபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பண்டைய பழங்குடியின மக்களுக்கான பெரும் திட்டத்தின் கீழ், 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தலா ரூ. 5. 09 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.