நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில் அத்தனூர் புத்தூர் சமுதாய கூடத்தில் சித்திரம் பவுண்டேஷன் மற்றும் வாசன் ஐ கேர் மணிமா மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கண்ணன் அத்தனூர் பேரூர் கழக செயலாளர் ஆர். எம். துரைசாமி வெண்ணந்தூர் ஒன்றியம் திமுக ஐடி விங் ரேவதி ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர்.