சிறுதானிய வகைகள், பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம்

83பார்த்தது
நாமக்கல் வேளாண்மை அலுவலர் சௌந்தர்ராஜன் கூறியிருப்பதாவது:

சிறுதானியங்களும் அவற்றின் பயன்களும்: -

சிறுதானியங்கள் என்பவை கம்பு, சோளம், தினை, வரகு, சாமை, கேழ்வரகு மற்றும் பனிவரகு போன்றவை தான். இன்றைக்கும் கிராமங்களில் சிறு தானியங்களை உண்பவர்களது ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நீரரிழிவு, உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதில்லை. எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து விவசாயிகள் சிறுதானியங்களை அதிகளவில் பயிரிட வேண்டும். மீண்டும் மக்கள் அனைவரும் சிறுதானிய உணவினை தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்திட வேண்டும், உடல்நலம் பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
    
ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி  நிறுவனம் வழங்கிய பயிற்சியில் சான்று பெற்ற வேளாண் ஆலோசகர் (சிறுதானியங்கள்) சௌந்தர்ராஜன், வேளாண்மை அலுவலர், நாமக்கல், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளில் சிறுதானிய தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் விவசாயிகள் பங்கு கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் தொகுப்பு நிதியினை பெற்று பயடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: -
இயக்குநர், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம்,. ராஜேந்திர நகர், ஹைதராபாத். ,
தொலைபேசி எண்: 04024599382

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி